சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக மேலாளர் சரமாரியாக தாக்கு - அதிர்ச்சி காட்சிகள்
krishnagiri
beaten
hotel manager
2 arrest
By Anupriyamkumaresan
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து மேலாளரைத் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூளகிரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட ஓசூரைச் சேர்ந்த நண்பர்கள் 4 பேர், அதற்கான பணத்தை செலுத்தாமல் செல்ல முயன்றுள்ளனர்.
இதுபற்றி கேட்ட உணவக மேலாளர் ஹரிஷை அவர்கள் தாக்கியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. கணினிகள், அலைபேசிகள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. காயமுற்ற ஹரிஷ் அளித்த புகாரின்பேரில், தகராறில் ஈடுபட்ட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த சூளகிரி காவல் துறையினர், கணேஷ், அர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்தனர்.