ஒரே நொடியில் தாய், மகள், பேத்திக்கு நடந்த சோகம்!! என்ன நடந்தது?
கிருஷ்ணகிரி அருகே துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கியதில் தாய், மகள், பேத்தி என மூவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வசித்து வருபவர் இந்திரா. இவரது மகள் திருமணம் முடிந்து கணவர் குழந்தை என வசித்து வரும் நிலையில், தற்போது விடுமுறைக்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தாய் இந்திரா இரும்பு கம்பியில் துணிகளை காய வைக்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து இந்திரா மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகள், இடுப்பில் குழந்தையோடு தாயை எழுப்ப முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் ஒரே நொடியில் தாயும், குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,
சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.