தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு? க்ரிஷ் சோடங்கர் விளக்கம்

Indian National Congress Seeman Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 04, 2026 01:30 PM GMT
Report

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு க்ரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார்.

தவெக வெற்றி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் தேர்தலை எதிர்கொண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு? க்ரிஷ் சோடங்கர் விளக்கம் | Krish Chodankar React To Congress Support Tvk Govt

ஆட்சி ஆட்சியமைக்க 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தற்போது 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இன்னும் 10 தொகுதிகளே தேவைப்படும் நிலையில், ஆட்சியமைக்க எந்த கட்சிகளுடன் விஜய் பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், கூட்டணியில் இணையம் கட்சிகளுக்கு வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் தவெக தரப்பில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எந்த கட்சியும் கூட்டணிக்கு முன்வரவில்லை.

காங்கிரஸ் ஆதரவா?

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு? க்ரிஷ் சோடங்கர் விளக்கம் | Krish Chodankar React To Congress Support Tvk Govt

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பீர்களா தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இளைய தலைமுறையினர் மற்றும் பெண்கள் மற்றம் வேண்டும் என்பதற்காக வாக்களித்துள்ளனர். இதனால், தவெக வெற்றி பெற்றிருக்கிறது. 

தமிழக தேர்தல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிக்கை அளித்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.