ஏழை, எளிய மக்களுக்கு உதயவியதால் பிரச்சனை - KPY பாலாவின் காதலுக்கு வந்த சிக்கல்?
கேபிஒய் பாலாவின் திருமணத்துக்கு பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் பாலா
'கலக்கப்போவது யாரு' மற்றும் 'குக் வித் கோமாளி' ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலா. சில திரைப்படங்களிலும் அவர் அவ்வப்போது நடித்து வருகிறார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் பாலா பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறார்.

மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, ஆட்டோ, தையல் மெஷின், திருமணச் செலவுகள் என மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாலா, தான் காதலித்து வந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
திருமணத்தில் சிக்கல்
ஆனால் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் பாலா தான தர்மம் செய்து விடுவதால் பெண் வீட்டார் திருமணத்திற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. சினிமா சம்பாத்தியம் நிலையானது அல்ல. பணம் கிடைக்கும்போது சேர்த்து வைத்தால்தான் வாய்ப்பில்லாதபோது உதவும்.

பாலா சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கும் உதவிகள் செய்துவிடுகிறார் என்று சிலர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் பெண் வீட்டில் இவர்களின் திருமணத்திற்கு தற்போது சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் பாலாவுக்கு ஆதரவாக பல பிரபலங்களும் அந்த பெண் வீட்டில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. பாலாவின் உதவும் மனப்பான்மைக்கு பாராட்டுக்கள் பல குவிந்து வந்தாலும், இதுவே அவரது காதலுக்கு வில்லனாக மாறியிருக்கிறது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    