காமெடியன் பாலா வாழ்க்கையில இப்படி ஒரு சோக சம்பவமா? - ரசிகர்கள் வேதனை
எப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் பாலாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான ஷோக்களில் ஒன்றான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்களில் ஒருவரான பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். ரைமிங் ஆன டைமிங் காமெடிக்கு பெயர் போன பாலா வெள்ளித்திரையிலும் தற்போது நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான நீயா-நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலா தன் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சோக சம்பவம் குறித்து பேசியுள்ளார். இதுவரை தன் வாழ்வில் நான்கு முறை காதல் தோல்விகளை சந்தித்து இருப்பதாக கூறியுள்ளார்.
அதாவது 2019 ஆம் ஆண்டு ஒரு சரியான லவ்...ஒரு பெண்ணை பார்த்ததுமே சரியான ஸ்பார்க் அடிச்சது... அந்த பொண்ணும் ஜாலியா பேசுனாங்க. நானும் பேசுறேன்.. ஒருநாள் அந்த பொண்ணுகிட்ட உங்களை பிடிச்சி இருக்கு... வாழ்க்கையில 2, 3 லவ் பண்ணி இருக்கேன்.. ஆனா எதுவுமே சக்ஸஸ் ஆனது இல்ல.. உங்ககிட்ட பேசுறத வச்சி சொல்றேன் அப்டின்னு சொன்னேன்.பயப்படாம சொல்லிட்டேன்.
ஆனால் அதுக்கு அந்த பொண்ணு அழுதுகிட்டே உங்களை நான் என் அண்ணன் மாதிரி நினைச்சேன்னு சொல்லிட்டாங்க.. எனக்கு ஹார்ட் அப்டியே இறங்கிடுச்சு! என்று பாலா தன் காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். மேலும் இன்னும் என் வாழ்க்கையில் கிட்னி மட்டும் தான் ஃபெயிலியர் ஆகல.அது தவிர்த்து எல்லாமே ஃபெயிலியர் ஆகிடுச்சு என வழக்கமான ரைமிங் தன் சோகத்தை மறைக்கும் அளவுக்கு சொன்னது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

viral video: கொடிய விஷம் கொண்ட Gaboon Viper பாம்பிடம் சேட்டை செய்த நபர்... இறுதியில் என்ன நடந்தது? Manithan

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம்: கிடைத்தது கருப்பு பெட்டி - ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

பழிவாங்கும் படலம் ஆரம்பம்...! சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான் - முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல் IBC Tamil
