அப்போ கூலித்தொழிலாளி..இப்போ சூப்பர் மாடல் : இணையத்தை கலக்கும் 60 வயது முதியவர்
மங்கிபோனா லுங்கி அழுக்கை சட்டையுடன் கேரளாவின் கோழிகோட்டில் சுற்றி திரிந்த 60 வயதான முதியவர் இன்று சூப்பர் கிளாம் மாடலாக சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார்.
கேரள மாநில கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயது முதியவரான இவர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த தினசரி கூலித் தொழிலாளியின் மாடலிங் திறமையைக் கண்டறிந்த புகைப்படக் கலைஞர் ஷரீக் வயல் என்பவர் ,
தனது சமூக ஊடகப் பக்கத்தில் பார்ப்பதற்கு மலையாள நடிகர் விநாயகன் போல தோற்றமளிக்கும் மம்மிக்காவின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சாதாரண கூலித்தொழிலாளியான மம்மிக்காவை மேக்கப் கலைஞரான மஜ்னாஸ் சூப்பர் மாடலாக மாற்ற ஆஷிக் ஃபுவாத் மற்றும் ஷபீப் வயலில் ஆகியோர் உதவியுடன் சூப்பர் மாடாலக மாறியுள்ளார் மம்மிக்கா.
மம்மிக்கா இப்போது ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதில் அவர் வழக்கமான உடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் மேக் ஓவர் செய்யப்படும் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகிறது.
கோழிக்கோட்டில் சாதாரண கூலித்தொழிளாளியாக இருந்த மம்மிக்கா தற்போது ஹீரோவாக வலம் வருவதை அந்த பகுதி மக்கள் வியந்து பார்த்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
You May Like This