ராக்கெட் வேகத்தில் வெங்காயம் விலை - எப்போதுதான் குறையும்?
வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வெங்காய விலை உயர்வு
நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்துள்ளதால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி,
மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு வெங்காயத்தை பல்வேறு மாநிலங்களுக்கு டன் கணக்கில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுப்பப்பட்டது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், பல மாவட்டங்களில் வெங்காயம் முழுமையாக சென்று சேராத காரணத்தால் விற்பனை விலை உச்சத்தை தொட்டது.
மார்க்கெட் விலை
எனவே, இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் 70 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,
பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் காரிஃப் பயிர் வரத்து தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் வெங்காய விலை குறையும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசின் நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.