ஆதரவற்றோருக்கு கரம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்!

covid19 tamilnadu
By Irumporai May 19, 2021 08:41 PM GMT
Report

கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து கடைகள், சந்தைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலை தொடர்கிறது.

சென்னை கோயம்பேடு சந்தையும் மூடப்பட்டதன் காரணமாக அங்கு மூட்டை தூக்குபவர்கள் காய்கறி வண்டிகளை இழுபவர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர்.

அதில் பலர் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் கோயம்பேடு பகுதியில் சாலை ஓரங்களில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விருங்கம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கோயம்பேடு பகுதியில் வீடின்றி  உள்ள 150 மேற்பட்டவர்களை மாநகராட்சி பள்ளிக்கு தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் பேருந்துகள் மூலம், வீடற்றோர் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.

பொது முடக்கம் வரை மாநகராட்சி பள்ளியில் வீடற்றோர் தங்க வைக்க படுவார்கள் என்றும்.

அவர்களுக்கு உணவு உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும்  செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.