நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கோவில்பட்டி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

tnelections2022 kovilpattiurbanlocalelections
By Swetha Subash Feb 19, 2022 02:58 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணி முதலே மக்கள் பல்வேறு பகுதிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளி இரண்டாம் நம்பர் வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்ப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காலை 7 மணிக்கு நடைபெறவிருந்த வாக்குப்பதிவு தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.