கோவை டூ பழனி ரயில் பயணம் செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

southernrailway covaitopalani palanitocovai
By Petchi Avudaiappan Dec 13, 2021 11:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கோவை -மதுரை இணைப்பு ரயிலான கோவை - பழனி ரயில் இயக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மதுரை -கோவை இடையே பழனி வழியாக இருவழி மார்க்கத்தில் முன்பதிவில்லாத ரயில் போக்குவரத்து கடந்த மாதம் நவம்பர் 10 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.

இது மதுரை -பழனி, பழனி -கோவை ரயில்கள் இணைப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது மதுரையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில், அங்கிருந்து தொடர்ச்சியாக கோவைக்கு செல்லும்.

இந்த நிலையில் பொள்ளாச்சி வழியே இயங்கும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 06463) இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது. பகுதி நேர அட்டவணைப்படி இந்த ரயில் கோவையில் மதியம் 2.10 மணிக்கு பதிலாக 2.33 மணிக்கு புறப்படும்.

கோவை - பழனி விரைவு ரயில் (06463) தற்போது பிற்பகல் 2:10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மாலை 4:40 மணிக்கு பழனி சென்றடைகிறது. எதிர்மார்க்கத்தில் காலை 10:35 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 11:14 மணிக்கு புறப்படுகிறது. இந்த நேரமாற்றம் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.