ஓபிஎஸ் அணியைவிட்டு திமுகவில் இணையும் கோவை செல்வராஜ் : காரணம் இதுதான் ?
ஓபிஎஸ் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய கோவை செல்வராஜ் நாளை திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல்
அதிமுகவில் தலைமை குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் வசம் உள்ளனர்.

ஓபிஎஸ் அணியில் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், கோவை செல்வராஜ் ஆகியோர் இருந்தனர். அதில் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.
திமுகவில் இணையும் செல்வராஜ்
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகப்போவதாக கோவை செல்வராஜ் அறிவித்தார். அப்போது அவர் இபிஎஸ் அணிக்கு செல்லப்போகிறாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
தற்போது அவர் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்
இது குறித்து அவர் கூறும்போது சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை எனக் கூறினார்.