இதானால் தான் கோவை குணா இறந்தார் : பகீர் தகவல் சொன்ன மதன் பாபு
கோவை குணா மரணத்திற்கான காரணத்தை காமெடி நடிகர் மதன்பாபு விளக்கியுள்ளர்.
கோவை குணா
சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் கோவை குணா இவர் சிவாஜி,கவுண்டமணி, ஜனகராஜ் ஆகியோரின் குரல்களை மிக்கிரி செய்து மக்கள் மனதில் புகழ்பெற்றார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் . இந்த நிலையில் அவரது மரணம் குறித்து அசத்தபோவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற நடிகர் மதன்பாபு பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
மரணத்திற்கு இதுதான் காரணம்
அதில், கோவை குணா ஆள் சும்மா கும்முன்னு இருப்பார் , அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் நடுவராக இருந்துள்ளேன் , அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் சிற்ந்தவர் கோவை குணாதான் மிக்கிரி மட்டும் அல்லாது சொந்தமாக நகைச்சுவை செய்து நம்மை கவர வைப்பார். அசத்தபோவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு எனது நண்பர் எடுத்த திரைப்படத்தில் குணாவை நடிக்க வைக்க பரிந்துரை செய்தேன் , அவரது நடிப்பு பிடித்து போல படத்தில் நடித்தார்.
அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது . ஆனாலும் நான் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் சொல்வது இதுதான். கெட்ட பழக்கங்கள் அளவோடு இருக்க வேண்டும் என்று கூறிய மதன்பாபு. இந்த நேரத்தில் இதை நான் பேசக்கூடாது, இருப்பினும் இதை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இண்டஸ்ட்ரியில் நிறைய பேர் இப்படி காலமாகிறார்கள். அதில் பலரையும் இப்படியான கெட்ட பழக்கம் ஆட்கொண்டுவிடுகிறது.
கோவை குணா அவ்வளவு பெரிய திறமை வாய்ந்தவர். இவர் சரியா இருந்து, சரியான வழியில் போயிருந்தா, இன்னொரு சந்திரபாபு அவர். பாடுவார், ஆடுவார், ஒரிஜினலாக பெர்ஃபார்ம் பண்ணுவார், இன்னொருவரை இமிடேட் செய்வார். கடைசி நேரத்தில் அவர் உறவுக்காரர்களுடன் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது.
அதனால் பேசாமல் இருந்தேன். சின்னத்திரையிலிருந்து பெரியதிரை வந்தவர்களில் பெரிய இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர் அவர், ஆனால் வரவில்லை. இனி எங்க வரப்போறாரு. அவர் உயர உயர போகணும் என நினத்தேன். ஆனால் இவ்வளவு உயரத்துக்குப் போவார் என நினைத்துப் பார்க்கவில்லை. அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.