கோவையில் அட்டகாசம்... - அசால்டா சுவரை உடைத்து வெளியே வந்த மக்னா யானை...! வீடியோ வைரல்...!
கோவையில் அசால்டா சுவரை உடைத்து வெளியே வந்த மக்னா யானையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவையில் மக்னா யானை அட்டகாசம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கோவை மாநகருக்குள் புகுந்த மக்னா வகை யானை 2-வது நாளாக சுற்றித் திரிந்துக் கொண்டு வருகிறது.
குடியிருப்புகள், சாலைகள், தோட்டங்களை கடந்து யானை நடந்துச் சென்றுக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து காட்டு யானையை பிடிக்க 2 பிரிவுகளாக பிரிந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் சுவரை உடைத்து யானை வெளியே நடந்துச் செல்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
தர்மபுரியில் பிடிக்கப்பட்டு வரகலியாறு டாப்சிலிப் வனப் பகுதியில் விடப்பட்ட மக்னா யானை சுமார் 100 கி.மீ நடந்து கோவை மதுக்கரை வந்தடைந்தது. pic.twitter.com/dRVGfRk7Vq
— CovaiTalks (@CovaiTalkss) February 22, 2023
வரட்டா ஆ.... தருமபுரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உலா வந்தபோது யானை வருவது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர் யானையை பார்த்து திரும்பிய காட்சி.@gurusamymathi @kovaikarthee @PrasanthV_93 @PT__journo__PK @vijay_vast @ASubburajTOI #TNForest pic.twitter.com/ky6vAy2rOh
— Srini Subramaniyam (@Srinietv2) February 22, 2023