போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய், மகன் - அதிர்ச்சி சம்பவம்!
கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த தாய், மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில், போலீசார் நேற்று முன் தினம் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த தாய், மகனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பையில் சோதனை மேற்கொண்டபோது, அவர்களிடம் 170 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.