கூலாக உட்கார்ந்தே மனு வாங்கிய கலெக்டர் - கடுப்பான அதிமுக எம்.எல்.ஏக்கள்!! அடுத்து என்ன நடந்தது?
கோவையில் மனு கொடுக்க சென்ற எம்.எல்.ஏவிடம் உட்கார்ந்தே மனுவை வாங்க முயன்ற மாவட்ட ஆட்சியரின் செயலால் மனு கொடுக்க சென்றவர்கள் கடுப்பான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில், தடுப்பூசி மையங்களை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அரசி விழாக்களுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏவான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளிட்டோர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர்.
அப்போது எஸ்.பி.வேலுமணி மனு கொடுக்க மாவட்ட ஆட்சியரின் அருகில் சென்றுள்ளார். இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்கார்ந்து கொண்டே வாங்க முயன்றுள்ளார்.
இதனை கண்ட மற்ற எம்.எல்.ஏக்கள் ஏன் எழுந்து நின்று வாங்கமாட்டீர்களா என மிரட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர் எழுந்து நின்று மனுவை வாங்கியுள்ளார்.
இதில் கடுப்பான மற்ற எம்.எல்.ஏக்கள் இது என்ன பழக்கம், என்றும்,
இது மிகவும் தவறு என்றும் கோபத்துடன் சொல்லி சென்றுள்ளனர்.