கோவை சிறுமி காணாமல் போகும் போது தாய் போதையில் இருந்தாரா?

Tamil nadu Crime
By Manchu May 26, 2026 10:20 AM GMT
Report

கோவை சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்திற்கு முதல்வர் விஜய் நிவாரண தொகை அறிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிப்பதாக கூறியுள்ளார்.

முதல்வர் ஆறுதல்

கோவை சூலூரில் 10 வயது சிறுமி ஒருவர் காணாமல் சென்ற நிலையில், சில தினத்திற்கு பின்பு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து நபர் ஒருவர் அழைத்துச் சென்று, சித்ரவதை செய்து உயிரை பறித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக கட்சி அமைச்சர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதாக கூறியுள்ளனர்.

கோவை சிறுமி காணாமல் போகும் போது தாய் போதையில் இருந்தாரா? | Kovai Child Death Cm Vijay Promises Strict Action

மேலும் தவெக கட்சி தலைவர் விஜய் சிறுமியின் தாயிடம் போனில் பேசி ஆறுதல் கூறியதுடன், 7 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி குற்றவாளிகள் தப்பிக்க முடியாத அளவில் கடுமையான தண்டனை கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

கோவையில் 10 வயது சிறுமி கொலையில் 2 பேர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கோவையில் 10 வயது சிறுமி கொலையில் 2 பேர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆனால் சிறுமியை அழைத்துச் சென்ற நபர் அவரது அம்மாவிற்கு தெரிந்தவர் என்றும் அப்பொழுது அவர் போதையில் இருந்ததாக தகவல் வெளியானது.

கோவை சிறுமி காணாமல் போகும் போது தாய் போதையில் இருந்தாரா? | Kovai Child Death Cm Vijay Promises Strict Action

இதனை மறுத்துள்ள சிறுமியின் தாய், கடைசியில் கணவர் தான் ஃப்ரிட்ஜில் வாங்கி தண்ணீரில் கலந்து வைத்துள்ளார் என்றும் அதனை கூல் ட்ரிங்ஸ் என நினைத்து தான் தாகத்துக்கு குடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மற்றொரு புறம் தன்னிடம் குழந்தையின் முகத்தை காட்டாமல் கணவர் அடக்கம் செய்துவிட்டதாகவும், அரசாங்கத்திடம் இருந்து கொடுக்கப்பட்ட தொகையை அவரே வைத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.