அடங்க மறுக்கும் காளைகள்...அடக்க முயலும் வீரர்கள் - கூத்தப்பா் கிராம ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு
Tiruchirappalli
Jallikattu
By Thahir
கூத்தப்பர் கிராமத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பை எட்டியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு
தை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு, அவனியாபுரம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம், கூத்தப்பர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளன.
திமிரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாடுகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.