கொந்தகை அகழாய்வு: முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடு கண்டெடுப்பு

Skeleton Kontakai mansion
By Irumporai Apr 23, 2021 10:21 AM GMT
Report

கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியில் இன்று எலும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி அருகே அமைந்துள்ளது கொந்தகை. இங்கு தமிழக தொல்லியல் துறையின் சார்பாக இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இங்கு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது முழுவதும் மூடப்பட்ட இந்தத் தாழிகளில் உள்ள எலும்பு கூடுகளை ஆய்வுக்காக வெளிக்கொணரும் பணி இன்று நடைபெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுவியல் துறைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் திரு குமரேசன் தலைமையில் இப்பணி துவங்கியது.

அப்போது,முதுமக்கள் தாழிகளில் உள்ள எழும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

கொந்தகை அகழாய்வு: முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடு கண்டெடுப்பு | Kontakai Excavation Skeleton

இந்த எலும்புக்கூடுகள் காலம் குறித்த தகவல்களை கண்டறிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மூலக்கூறு ஆய்வுகள் நடத்தப்படும் என அலுவலர்கள் மற்றும் மரபணு துறை பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.