அவுங்க எனக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாத்திட்டாங்க - நடிகை சமந்தா
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் எனக்கும் நயன்தாராவிற்கும் சமமான கதாபாத்திரம்தான். விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டதாக நடிகை சமந்தா மனம் திறந்திருகிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய அளவில் முன்னனி நடிகையாக இருக்கும் சமந்தா விரைவில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பக்கமும் கால் பதிக்க தயாராகிவிட்டார்.
ஹிந்தியில் நடிகை டாப்ஸி தயாரிக்கும் புதிய படத்தில் அவர் நடிப்பார் என செய்திகள் வெளின நிலையில் ‘எல் இந்தியா’ நிறுவனத்திடம் சமந்தா சில விஷயங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தனது கதாபாத்திர தேர்வு குறித்தும் பகிர்ந்திருக்கும் சமந்தா , ‘தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கும்’ என கூறியிருக்கிறார்.
மேலும், ‘இரண்டு ஹீரோயின்கள் படம் என்றால் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு நடிப்பார்கள், யாருக்கு அதிகமாக நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கிறது என பார்ப்பார்கள்.
ஆனால் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் எனக்கும் நயன்தாராவிற்கும் சமமான கதாபாத்திரம்தான்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் எனக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டனர்’ என தெரிவித்திருக்கிறார்.
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil