மும்பை இந்தியன்ஸ் அணியை புரட்டி எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: ரசிகர்கள் உற்சாகம்
மும்பை இந்தியன்ஸ் அணியை புரட்டி எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்.19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில்,நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

முதல் போட்டியில் ஆர்சிபி அணியை காலி செய்த கொல்கத்தா, போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை புரட்டி போட்டது. இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அதிக ரன் ரேட்டுடன் (+0,36) 4வது இடத்துக்கு முன்னேறியது.

9வது போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. அதேசமயம், 9வது போட்டியில் விளையாடிய மும்பை 5 தோல்வியை பதிவு செய்தது. அதுமட்டுமல்ல, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின்தங்கியது.