மேற்கு வங்கத்தில் தீவிரமடையும் கொரோனா: தேர்தல் பிரச்சாரங்கள் தான் காரணமா?
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டம் ஆடி வருகிறது. ஆனால் பாதிப்புகள் உச்சம் தொடும் வரை மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரசும் தங்களுடைய தேர்தல் பிரச்சார பேரணிகளை ரத்து செய்தன.
ஆனால் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. நான்கு கட்ட மேற்கு வங்க தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் கல்கத்தாவில் கொரோனா பாதிப்பு விகிதம் இமாலய அளவில் அதிகரித்து வருகிறது.
கல்கத்தாவில் பரிசோதனை செய்யப்படும் இருவரில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.
ஏப்ரல் 24 -ம் தேதி 55,060 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 14,281 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாசிட்டிவ் விகிதம் 26% ஆகவும், கலகத்தாஅவில் கிட்டத்தட்ட 50% ஆகவும் உள்ளது.
பரிசோதனை குறைவாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் உண்மை நிலவரம் இதைவிடவும் மோசமாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு தேர்தல் பேரணிகள் முக்கியமான காரணமாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.