அதிரடி வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை
கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வீரரான ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரின் 34-வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார், இதன்படி வீரர்கள் களமிறங்கி விளையாடினர்.
இன்றையப் போட்டியில் ரோஹித் சர்மா 33 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன் மூலம் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த முதல் வீரரும் ரோஹித் சர்மா தான்.
ரோஹித் சர்மாவிற்ககு அடுத்தப்படியாக சன்ரைசர்ஸ் வீரர் டேவிட் வார்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக 943 ரன்கள் மற்றும் கேகேஆர் அணிக்கு எதிராக 915 ரன்கள் எடுத்துள்ளார்.