Thursday, Jul 10, 2025

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு 128 ரன்கள் இலக்கு!

By Fathima 4 years ago
Report

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில், ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 127 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதன்படி முதலில் டெல்லி வீரர்கள் களமிறங்கி விளையாடினர்.

20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஷிகர் தவன், ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரராகக் களமிறங்கிய ஸ்மித், 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து, ஃபெர்குசன் பந்தில் போல்ட் ஆனார்.

ஷ்ரேயஸ் ஐயர் 1 ரன்னிலும் ஹெட்மையர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள், தொடர்ந்து வந்த வீரர்களும் சோபிக்காத நிலையில், ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து கொல்கத்தா அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.