நாட்டை உலுக்கிய மாணவி கொலை வழக்கு; இயற்கைக்கு மாறான உறவு - மருத்துவர்கள் ஸ்டிரைக்!

Attempted Murder Sexual harassment West Bengal Crime
By Sumathi Aug 12, 2024 04:50 AM GMT
Report

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு 250 எம்பிபிஎஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.

சஞ்சய் ராய்

ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (28) பணியில் இருந்துள்ளார்.

தொடர்ந்து, அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்!

6 வருஷமா பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; கர்ப்பமாகிய மகள் - கொடூர சம்பவம்!

மருத்துவர்கள் போராட்டம்

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்தனர். சம்பவத்தன்று பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.

நாட்டை உலுக்கிய மாணவி கொலை வழக்கு; இயற்கைக்கு மாறான உறவு - மருத்துவர்கள் ஸ்டிரைக்! | Kolkata Trainee Female Doctor Issue Strike

அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மருத்துவமனை வளாகத்தின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அவர் இயர்போனை காதில் மாட்டியிருந்துள்ளார்.

சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியேறுகையில், அவரது காதில் இயர்போன் இல்லை. பெண் மருத்துவரின் உடல் அருகே ‘இயர்போன்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது செல்போனை ஆய்வு செய்ததில், இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன.

அவருக்கு 4 முறை திருமணமாகி உள்ளது. அவரது பாலியல் தொந்தரவை சமாளிக்க முடியாமல் அனைத்து மனைவிகளும் பிரிந்து சென்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்றுக் கூறி முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மற்ற டாக்டர்கள்,

இனிமேல் இரவு நேர பணிக்கு வரமாட்டோம் என கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர். மருத்துவமனையில் ஐசியூ பிரிவை தவிர, மற்ற டாக்டர்கள் எல்லாருமே போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.