விடுமுறை தராததால் ஆத்திரம் - சக ஊழியர்கள் 4 பேருக்கு கத்திக்குத்து
விடுமுறை தராத ஆத்திரத்தில் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் உள்ள கரிகாரி பவனின் தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணியாற்றி வருபவர் அமித் குமார் சர்க்கார்(Amit Kumar Sarkar).
இந்நிலையில் நேற்று(07.02.2025) காலை அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
விடுமுறை மறுப்பு
அதன் பிறகு பட்டப்பகலில் ரத்தம் வடியும் கத்தியை கையில் வைத்து கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனை வீடியோ எடுத்த பொதுமக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் அமித் குமார் சர்க்காரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையில் அவர் விடுப்பு கேட்ட போது விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் சக ஊழியர்களை குத்தியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இவருக்கு கத்தி எப்படி கிடைத்தது, விடுமுறை ஏன் மறுக்கப்பட்டது என காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இவருக்கு மனநல பாதிப்பு உள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கத்தியால் குத்தப்பட்ட ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்துனு சஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபுல் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.