தோல்வியுடன் விடைபெற்றார் கோலி : கடைசி ஓவரில் கொல்கத்தா 'த்ரில்' வெற்றி

rcb ipl2021 RCBvKKR KKRiders
By Irumporai Oct 11, 2021 06:03 PM GMT
Report

ஐபிஎல் சீசனின் இன்றைய எலிமினேட்டர் சுற்று போட்டிகள் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மர்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்றுப் போனது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டா் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் விளையாடி விளையாடியது.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க வீரர் படிக்கல் 21 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்தில் போல்ட் ஆனார்.

இவரைத்தொடர்ந்து ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல் நரைன் ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக பெங்களூர் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

கொல்கத்தா அணியில் சிறப்பாக சுனில் நரைன் 4, பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர் இருவரும் களமிறங்கினார்.

நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 29 ரன்கள் எடுத்து ஏபி டிவில்லியர்ஸ் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இறங்க ராகுல் திரிபாதிவந்த வேகத்தில் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் எடுத்து ஸ்ரீகர் பாரத்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால், கொல்கத்தா அணி 79 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து இருந்தனர்.

பின்னர் களமிறங்கிய சுனில் நரைன் தொடர்ந்து 3 சிக்சர்கள் விளாசி ஆட்டத்தை மாற்றினார். 18-வது ஓவரை வீசிய சிராஜ் 2-வது பந்தில் சுனில் நரைன் விக்கெட்டையும், 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக் சுனில் நரைன் பறித்தார்.

இதனால் அந்த ஓவரில் 2 விக்கெட் 3 ரன்கள் மட்டுமே சென்றது. இருந்தபோதிலும் 12 பந்தில் 12 ரன்கள் என்ற நிலையில் இறுதியாக கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியில் முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இப்போட்டியில் தோல்வியை தழுவியதால் பெங்களூர் அணி வெளியேறியது.

you may like this video