கொல்கத்தாவுடன் மோதும் சிஎஸ்கே; பிட்ச் எப்படி - யாருக்கு சாதகம்?
இன்று இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.
KKR vs CSK
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், மும்பை, டெல்லி அணிகளிடம் தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படாதது பிரதான காரணமாக அமைந்தது.
தோனி தலைமையிலான சிஎஸ்கே 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவில் சிஎஸ்கே அணிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளதால் இன்றைய ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
யாருக்கு சாதகம்?
2வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு வரும் என்பதால், டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் இரு அணிகளிலும் தரமான ஸ்பின்னர்கள் இருப்பதோடு, வேகப்பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். சென்னை அணியில் இம்பேக்ட் பிளேயராக சுழற்பந்துவீச்சாளரை ஆட வைக்க வாய்ப்புகள் உள்ளது.
கொல்கத்தா அணி சொந்த மண்ணில் களமிறங்குவதால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற இரு போட்டிகளிலும் சிஎஸ்கே அதிகளவில் ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இன்றைய ஆட்டத்திலும் அதிக ரன்கள் சேர்க்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என ஆலோசிக்கப்படுகிறது.