உங்களால் டைம் வேஸ்ட்: கொல்கத்தா அணியினருக்கு அபாராதம் போட்ட ஐபிஎல் நிர்வாகம்
20 ஓவர்களை வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் கொல்கத்தா அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. டி காக் 55 ரன்கள் எடுத்தார். சுழற்பந்துவீச்சாளர்களான வருணும் நரைனும் அற்புதமாகப் பந்துவீசி மும்பை அணக்கு பெரும் சவலாக இருந்தனர்.
பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா 15.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் அடித்து வென்றது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் எடுத்தார்கள். இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. மும்பை அணி 6-வது இடத்துக்கு இறங்கியுள்ளது.
நேற்று, மும்பை அணி நீண்ட நேரம் பேட்டிங் செய்வது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு தோன்றியது 20 ஓவர்களை முடிக்க கொல்கத்தா அணி நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் .
கொல்கத்தா கேப்டன் மார்கனுக்கு ரூ. 24 லட்சமும் அணி வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 6 லட்சமும் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.