நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பேராசிரியை – ரூ.99 கோடி இழப்பீடு கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ்...!

Instagram
By Nandhini 3 மாதங்கள் முன்

நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பேராசிரியைக்கு ரூ.99 கோடி இழப்பீடு கேட்டு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பேராசிரியை

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அந்த கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் பேராசிரியை பார்த்து ரசித்துள்ளனர். பேராசிரியையின் புகைப்படத்தை வீட்டில் செல்போனில் வைத்து மகன் ரசித்துக் கொண்டிருந்ததை தந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

kolkata-instagram-photo-teacher

கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ்

மகனின் தந்தை நேராக கல்லூரிக்குச் சென்று இது குறித்து புகார் தெரிவித்தார். இதனையடுத்து, அந்த கல்லூரியிலிருந்து பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் புகைப்படம் பதிவிட்ட பேராசிரியையிடம் ரூ.99 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அந்த கல்லூரி நிர்வாகம். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.