54 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி..!

Kolkata Knight Riders Sunrisers Hyderabad IPL 2022
By Thahir May 14, 2022 07:06 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

ஐபிஎல் தொடரின் 61-வது லீக் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது.இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த வீரரகள் அடுத்தடுத்து அவுட்டாகி சென்றனர்.

இதன் பின் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ரசல் ஜோடி 63 ரன்கள் சேர்த்து பந்து வீச்சாளர்களை திணறடித்தது.

இதன் பின் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது சன்ரைசர்ஸ் அணி. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார்.

கேப்டன் வில்லியம்சன், ராகுல் திரிபாதியும் தலா 9 ரன்னுடன் வெளியேறினர். மார்க்ரம் 32 ரன் எடுத்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.