கொளத்தூர் தொகுதி: முக ஸ்டாலின் வழக்கில் இன்று தீர்ப்பு

M K Stalin
By Fathima Sep 03, 2026 03:23 AM GMT
Report

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்ககோரி முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடர்ந்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஎஸ் பாபு கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கொளத்தூர் தொகுதி: முக ஸ்டாலின் வழக்கில் இன்று தீர்ப்பு | Kolathur Verdict In Mk Stalins Case Today

இந்த தொகுதியில் இரண்டாம் இடம்பிடித்த என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று 14 வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

இதில் சில வாக்குஇயந்திரங்கள் திடீரென கோளாறானது, 6 வாக்குசாவடிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஒப்பிட்டு பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

இதனால் அனைத்தையும் சரிபார்க்க உத்தரவிடவேண்டும், விஎஸ் பாபு வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18