மு.க.ஸ்டாலினுக்காக கொளத்தூர் தொகுதியில் மனைவி துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்!

dmk stalin kolathur durga
By Jon Mar 23, 2021 02:38 AM GMT
Report

வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது மனைவியும் வாக்கு சேகரிப்பில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

திமுக தலைவர் தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அவரது மனைவியும் பிரசாரத்தில் இணைந்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் மு.க.ஸ்டாலினுக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற துர்கா ஸ்டாலின் அப்பகுதியில் இருக்கும் ரத்ன விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிறகு, மகளிர் குழுக்கள், குடியிருப்பு நல சங்கத்தினர், பொது மக்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மு.க.ஸ்டாலினுக்காக கொளத்தூர் தொகுதியில் மனைவி துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்! | Kolathur Stalin Wife Durga Election

  கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம். காலனி, சோமராமசாமி தெரு, கோபால்ரெட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துர்கா ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.