3 வது முறையாக கொளத்தூரில் களமிறங்கும் ஸ்டாலின்
3ஆவது முறையாக கொளத்தூரிலேயே களமிறங்குகிறார் ஸ்டாலின் . தமிழக்த்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்குவது என திட்டம் தீட்டி வருகின்றன.
அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓபிஎஸ் போடி தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதே போல, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
இவ்வாறு திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் பலர் அவரவர் தொகுதிகளிலேயே களம் காணவிருக்கின்றனர். இந்த நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். திமுகவில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் விருப்ப மனு அளித்தார்.
கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், வெற்றியைக் கண்டார்.
தற்போது 3ஆவது முறையாக கொளத்தூரிலேயே களமிறங்குகிறார் ஸ்டாலின் 1984 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் 9வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.