3 வது முறையாக கொளத்தூரில் ,வேட்பு மனு தாக்கல் செய்தார் ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று நாள் முகூர்த்த நாளாகஇருப்பதால் பல முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அயனவரத்தில் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2011, 2016 ஆகிய தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஸ்டாலின் 2016-ஆம் கொளத்தூர் தொகுதியில் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
1984-ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 தேர்தல்களை சந்தித்த ஸ்டாலின் 2 முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
தற்போது மூன்றாவது முறையாக கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.