கொளத்தூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம்? - சத்யபிரதா சாகு பரபரப்பு பேட்டி
சட்டமன்ற பொதுத் தேர்தல் நாளை தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்களை அனைத்து கட்சிகளும் நேற்றோடு முடித்துக் கொண்டன. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா வேலைகளில் மும்முரமாக இறங்கி வருகின்றன. தேர்தல் ஆணையத்திடம் பிரச்சாரத்தில் சர்ச்சைக்கரிய பேசியதாக பல புகார்கள் சென்றுள்ளன.
இந்நிலையில், நேற்று பறக்கும் படையினர் அதிமுக, திமுக, பாமக, பாஜக என யார் யாரெல்லாம் பணப் பட்டுவாடா செய்தார்களோ அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதனையடுத்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் புகார் ஒன்றை கொடுத்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி, திருச்சி மேற்கு, கொளத்தூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் திமுக பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் தெரிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திது பேசுகையில், பணப்பட்டுவாடா புகாரின் பேரில் குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்றார். இதனையடுத்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கொளத்தூர், திருச்சி மேற்கு, கரூர் திருவண்ணாமலை உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.