கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்
kolathur mla vs babu passed away: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ்பாபு காலமானார்.
வி.எஸ்.பாபு காலமானார்
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, அந்த தொகுதியில் போட்டியிட்டமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 72 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு இன்று மதியம் 2;24 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்துளனர். சற்று நேரத்தில் முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வி.எஸ்.பாபு, 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 வரை வட சென்னையின் திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார்.
அதன் பின்னர், திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.