கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பு
leader
dmk
stalin
kolathur
By Jon
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலினின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனுக்களை பரீசிலனை செய்து வருகின்றனர். அதன்படி திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.