விராட் கோலி இதைப் பற்றி மட்டும் தான் யோசிப்பார்: முன்னாள் வீரர் பரபரப்பு தகவல்

Virat Kohli Irfan Khan INDvsENG
By Petchi Avudaiappan Jun 11, 2021 12:14 PM GMT
Report

 இங்கிலாந்து தொடரின்போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஒரு விஷயத்தை மட்டும் தான் யோசிப்பார் என முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இதுகுறித்து Playfield இதழில் கட்டுரை இர்பான் பதான் எழுதியுள்ளார். அதில் விராட் கோலிக்கு ஆண்டர்சன் பந்துவீச்சின் போது எப்போதும் சந்தேகம் இருக்கும். ஏனென்றால் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர்.

ஸ்விங் ஆகும் பந்தை எதிர்கொள்ள உலகின் எந்தவொரு பேட்ஸ்மேனும் திணறுவார்கள். நீங்கள் இதை கோலியிடமே கேட்டுப்பார்க்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் பந்துகளைத் தான் கவர் டிரைவ் அடிப்பார். ஆண்டர்சன் ஆஃப் திசையில் பந்தை ஸ்விங் செய்தால் கோலி விரைவில் ஆட்டமிழக்க நேரிடலாம்" எனவும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.