கிரிக்கெட்டை விட்டு விராட் கோலி விலக வேண்டும் - முன்னாள் வீரர் அட்வைஸ்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சரந்தீப் சிங் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையுடன் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இதனால் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசிய முன்னாள் இந்திய அணியின் தேர்வாளரான சர்ந்தீப் சிங்விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்து முழுவதுமாக விலகி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டதால் மட்டுமே அவரால் பேட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்திவிட முடியாது. எனவே விராட் கோலி பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருந்தால் டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.