இந்திய அணியின் படுதோல்விக்கு இவர் தான் முழு காரணம் - கடுப்பான கபில்தேவ்
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெளியேறியதற்கு இவர் தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி உட்பட மற்ற அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மிக மோசமான தோல்விகளை சந்தித்தது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் அரையிறுதி வாய்ப்பு கிட்டவில்லை.
இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான கபில் தேவ், இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலி தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.