மிரள வைத்த ரோஹித், கோலி; முடிவுக்கு வரும் சகாப்தம்? குமுறும் ரசிகர்கள்
ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
டெஸ்ட் தொடர்
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. எனவே 3வது தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் விராட் கோலி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தில் அவர் 376 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 25 என்பது ஆக உள்ளது.
ரோகித் ஓய்வு
ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரியும் கவலைக்கிடமாக உள்ளது. அந்த அளவுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸ்களில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்துள்ளனர்.
இது ரசிகர்களுக்கு மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. தொடர்ந்து பலரும் அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரே கடைசி டெஸ்ட் தொடராக அமையவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் ரோகித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருவதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.