விடைபெற்றார் விராட் கோலி - டி20 கேப்டனாக சாதித்தது என்ன தெரியுமா?
டி20 இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து வெற்றியுடன் விராட் கோலி விலகியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு 20 ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக கோலி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் எப்படியாவது இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி கண்ட இந்திய அணி ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளை வென்ற போதிலும் தொடரில் இருந்து வெளியேறியது. விராட் கோலிக்கு, டி20 கேப்டனாக இன்றைய நமீபியாவுக்கு எதிரான ஆட்டம்தான் கடைசி போட்டியாகும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதில் 29 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதே சமயம் 4 ஆட்டங்களில் முடிவு இல்லை. கேப்டனாக விராட் கோலி இந்தியாவுக்காக 1489 ரன்கள் எடுத்துள்ளார்.
தோனிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான டி20 கேப்டன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
