மீண்டும் கோலிக்கு அபராதம் விதித்த பிசிசிஐ : காரணம் என்ன?

Virat Kohli Board of Control for Cricket in India
By Irumporai Apr 25, 2023 09:51 AM GMT
Report

விராட் கோலிக்கு மீண்டும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது

விராட்கோலி

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு போட்டிகளாக ஆர் சி பி அணியை கோலி வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் நேரம் எடுத்து ஆர் சி பி அணி பந்துவீசியது. அதனால் அணித் தலைவரான கோலிக்கு 24 லட்ச ரூபாய் அபராதமாக பிசிசிஐ விதித்துள்ளது.

மீண்டும் கோலிக்கு அபராதம் விதித்த பிசிசிஐ : காரணம் என்ன? | Kohli Penaltised For The Second Time In Ipl

மீண்டும் அபராதம்

 முன்னதாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட் செய்த போது ஷிவம் துபே ஆட்டமிழந்த போது கோலி, அதை ஆக்ரோஷமாக கொண்டாடினார். இது ஐபிஎல் விதிகளுக்கு எதிரான எனக் கூறி, போட்டிக் கட்டணத்தில் கோலிக்கு 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.