விராட் கோலி மேல் பந்தை கொண்டு அடித்த சென்னை வீரர் - வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் முகேஷ் சௌத்ரி செய்த சம்பவம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டூபிளெசிஸ் 38, விராட் கோலி 30, லோம்ரர் 42 ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகப்பட்சமாக தீக்ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனிடையே சென்னை அணியின் இளம் வீரர் முகேஷ் சௌத்ரி தனது ஓவர் இன்றில் இன் ஸ்விங் யாக்கர் லெங்த் பந்தை வீச முயற்சித்தார். ஆனால் நினைத்ததை விட கொஞ்சம் தள்ளி முகேஷ் வீச அதனை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதே போன்று அடுத்த பந்தை கோலி அடித்த போது அது முகேஷ் சௌத்ரியிடம் சிக்கியது.
Mukesh Choudhary hits Virat Kohli! pic.twitter.com/3eUdUdaec0
— Cricketupdates (@Cricupdates2022) May 4, 2022
கோலியும் க்ரீசில் இருந்து வெளியே வந்ததால் அவரை ரன் அவுட் ஆக்கும் முயற்சியில் முகேஷ் சௌத்ரி பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச அது கோலியின் காலில் பலமாக பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியில் கோலியிடம் அவர் மன்னிப்பு கேட்டார். கோலி யாரும் எதிர்பாராத வகையில் கட்டை விரலை உயர்த்தி பரவாயில்லை என சிரித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.