இந்தியா வீரர்களில் யாரும் செய்யாத சாதனை - அரைசதத்தில் சதம் அடித்த கோலி
RR க்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் கோலி 2 சாதனைகளை படைத்துள்ளார்.
RCB அபார வெற்றி
2025 ஐபிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து 173 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி(62), மற்றும் பில் சால்ட்(65) இருவரும் அரை சதமடித்தனர்.
பெங்களூரு அணி 17.1 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து, 175 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோலியின் 100வது அரை சதம்
இந்த அரை சதம் T20 போட்டியில் விராட் கோலியின் 100வது அரை சதம் ஆகும். இதன் மூலம் T20 போட்டியில் 100 அரை சதம் என்ற ஒரே இந்திய வீரர், உலகளவில் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், டி20 கிரிக்கெட்டில் 108 அரைசதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
மேலும், இந்த அரை சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் ஐபிஎல் போட்டிகளில் 66 அரைசதம் அடித்துள்ளனர்.
விராட் கோலி அடுத்து ஒரு அரை சதம் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.