ரோஹித் ,விராட் ரெண்டு பேரும் யார் மாதிரி தெரியுமா ? ரகசியம் சொன்ன ரவிசாஸ்திரி

kohli rohitsharma kapildev ravisasthri
By Irumporai Dec 28, 2021 09:01 AM GMT
Report

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் கேப்டன் பொறுப்பும் இப்படித்தான் இருக்கும் என்று ஒப்பிட்டு பேசியிருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் கேப்டன் பொறுப்பையும் முன்னால் ஜாம்பவான்களான கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

இது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்“விராட் கோலியுடன் நான் நீண்ட நாட்கள் பயணித்து உள்ளேன். அதே நேரம் ரோகித் சர்மாவையும் கவனித்து வந்திருக்கிறேன். இந்த வகையில் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு கபில்தேவ் போன்றது.

ஆக்ரோஷமாகவும் உற்சாகத்துடனும் மிகவும் தைரியமாகவும் இருக்கும். அதே நேரம் ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு சுனில் கவாஸ்கர் போன்றது. மிகவும் நிதானமாகவும் தொலைநோக்கு பார்வையுடனும் தெளிவான திட்டமிடலுடனும் இருக்கும்.

கேப்டன் பொறுப்பு கை மாறியதால் யாரும் கவலைப்பட தேவையில்லை. இருவரும் கிரிக்கெட் போட்டிகளை நன்கு உணர்ந்தவர்கள். அணுகுமுறையில் மாற்றம் இருக்கலாமே தவிர, இந்திய அணியின் வெற்றியை நோக்கிய இலக்கு இருவருக்கும் ஒன்றுதான்.” என்று தனது ஒப்பீட்டில் கூறியுள்ளார்.