அந்த வார்த்தையை மட்டும் சொல்ல வேணாம்; வருந்திய கோலி - பகிர்ந்த முன்னாள் வீரர்!
விராட் கோலி குறித்து முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் 18ஆவது சீசன், மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் மோதவுள்ளன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த அணியின் வீரர் டிவிலியர்ஸ் ‘ஈ சாலா கப் நமதே’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று கூறுவார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள டிவிலியர்ஸ்,
டிவிலியர்ஸ் ஷேரிங்
“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் அந்த வார்த்தைகளை ஏதோ ஒரு நாளில் குறிப்பிடும் போது விராட் கோலி இடம் இருந்து எனக்கு நேரடியாக செய்தி வந்தது. அவர் தயவுசெய்து இப்போது அதை சொல்வதை நிறுத்துங்கள் என்று கூறினார். அதனால் நான் சற்று சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.
நியாயமாக சொல்லப்போனால் இந்த சீசனில் கோப்பை வருகிறது என்று எப்போதும் சொல்லி சோர்வடைந்து விட்டேன். நண்பர்களே இது ஐபிஎல், உலக கோப்பையை வெல்லக்கூடிய 10 உலக தரம் வாய்ந்த அணிகள் உள்ளன. ஐபிஎல்லை பொருட்படுத்தாமல் இதை வெல்வது என்பது கடினமான போட்டியாகும். இது ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் ஆகும்.
எனவே இந்த 18 வது சீசனில் ஆர்சிபி கோப்பையை வென்றால் விராட் கோலியுடன் நான் அதை ஏந்துவதற்கு தயாராக இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.