கொடநாடு கொலை வழக்கு - தீபுவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில், 3வது நபராக குற்றம் சாட்டப்பட்ட தீபுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொடநாடு தேயிலை தோட்ட பங்களாவில் நடந்த கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையதாக முன்னர் கைதான நபர்களின் உறவினர்கள், நண்பர்கள், ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசார் இவ்வழக்கில் 3-வதாக குற்றம் சாட்டப்பட்ட தீபு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேற்குமண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் கிடுக்கு பிடி கேள்விகள் முன்வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வழக்கை தமிழ்நாடு காவல்துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் சூடுபிடித்துள்ளது.
முன்னதாக சேலம் பிரமுகர்கள், சசிகலா உறவினர்கள், நீலகிரி கொடநாடு தேயிலை தோட்ட மேலாளர், நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவ்வழக்கில் 3-வதாக குற்றம் சாட்டப்பட்ட தீபுவிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.