கொடநாடு வழக்கு : சசிகலாவிடம் நாளை விசாரணை..!
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நாளை காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.
சென்னை தனியார் ஹோட்டலில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள் கிடைத்தது குறித்தும் சசிகலாவிடம் விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சம்மனில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள் IBC Tamil

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
