Monday, Jul 14, 2025

கொட நாடு கொலை,கொள்ளை விவகாரம் : சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை

V. K. Sasikala Kodanad Case
By Irumporai 3 years ago
Report

கொட நாடு கொலை , கொள்ளை தொடர்பாக சென்ன்னை தியாகராய நகர் வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்ட பங்களாவில் 2017 ம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

இந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகாலாவிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவை விசாரிப்பதற்காக ஐ.ஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீஸ் சென்னை வந்துள்ளதுளனர்.இந்த விசாரணையானது சென்னையிலுள்ள சசிகலாவின் இல்லத்தில் நடத்தப்பட்டு வருகிறது .

கொட நாடு கொலை,கொள்ளை விவகாரம் : சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை | Kodanad Murder Case Sasikala Police Today

இந்த வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி ஆகியோர் சென்னை உயர்மன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடுத்து இருந்தனர்.

அதில் சசிகலா, சுதாகரன், இளவரசி, அப்போதைய மாவட்ட ஆட்சியர் சங்கர், அப்போதைய மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் முரளி ரம்பா , முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியிருந்த நிலையில் ,தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தற்போது விசாரணையினை சந்திக்கின்றார்.